"என்னை மன்னித்து விடுங்க!" - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆப்கன் முன்னாள் அதிபர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

"என்னை மன்னித்து விடுங்க!" - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆப்கன் முன்னாள் அதிபர்!

"என்னை மன்னித்து விடுங்க!" - நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆப்கன் முன்னாள் அதிபர்!

ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை இக்கட்டான நிலைமைக்கு விட்டுச் சென்றதற்கு, தன்னை மன்னித்து விடும்படி, அந்நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி உருக்கமாக அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். கடந்த 15ம் தேதி தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்த போது, அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி, சிறப்பு விமானம் மூலம் தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆப்கானிஸ்தானில், சர்வதேச பயங்கரவாதி முல்லா ஹசன் அகுந்த் தலைமையில், தலிபான்கள் அரசு அமைத்துள்ளனர். செயல் பிரதமராக ஹசன் அகுந்த், செயல் துணை பிரதமராக முல்லா அப்துல் கனி பரதமர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
ஆப்கானிஸ்தான் மக்களை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டதை எண்ணி தினமும் வருந்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக ஆப்கானிஸ்தான் மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் மக்களுக்கான அர்ப்பணிப்பு ஒருபோதும் மாறவில்லை. அது, வாழ்நாள் முழுவதும் எனக்கு வழிகாட்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad