இலவச தரிசன டோக்கன்கள் யாருக்கு கிடைக்கும்? தேவஸ்தானம் ஷாக் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

இலவச தரிசன டோக்கன்கள் யாருக்கு கிடைக்கும்? தேவஸ்தானம் ஷாக் அறிவிப்பு!

இலவச தரிசன டோக்கன்கள் யாருக்கு கிடைக்கும்? தேவஸ்தானம் ஷாக் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு சில மாதங்கள் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டது. அதன்பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்து, மீண்டும் பக்தர்கள் தரிசனம் தொடங்கியது. திருமலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு அதிகப்படியான மக்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பு
ஆன்லைன் வாயிலாக 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் கொரோனா பரவல் பெரிதும் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி நோய்த்தொற்று 1,200க்கும் கீழ் சரிந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 3.23 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில் 43.7 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
18.2 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டிருக்கின்றனர். திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் தினசரி தொற்று 300க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 132 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 125 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பரவலால் திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையொட்டி நான்கு மாதங்களுக்கு பின்னர், கடந்த 8ஆம் தேதி முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இதையொட்டி தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவின் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கடும் போட்டி நிலவுவதால் பலருக்கு டிக்கெட்கள் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படுகிறது. இதனால் ஆன்லைன் டிக்கெட் கிடைக்காதவர்கள் இலவச தரிசனத்தை நோக்கி திரும்புகின்றனர். ஆனால் சோதனை முறையில் அமல்படுத்தப் பட்டிருப்பதால் முதல்கட்டமாக சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதனால் ஸ்ரீனிவாசம் பக்தர்கள் காம்ப்ளக்ஸிற்கு வருகை தரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கவுன்ட்டர்களில் இருக்கும் தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி தகவலறிந்த திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், ஆந்திராவின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் தற்போதைக்கு வழங்கப்படாது.

No comments:

Post a Comment

Post Top Ad