வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும்: நடிகர் சித்தார்த் ஆவேசம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும்: நடிகர் சித்தார்த் ஆவேசம்..!

வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும்: நடிகர் சித்தார்த் ஆவேசம்..!

நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர். ட்விட்டரில் அவரை 4.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். தேசிய அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரையிலான சம்பவங்களை விமர்சித்து வரும் இவருக்கு அண்மையில் பாஜகவில் இருந்து மிரட்டல்கள் வந்ததாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கு பின்பு பாஜகவை நேரிடையாக விமர்சித்து ட்வீட் செய்து வருகிறார். இந்த நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று கடந்த இரண்டுமுறை நடைபெற்ற இரண்டு தேர்வுகளிலும் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று நடந்த நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த தனுஷ் இந்த நீட் தேர்விலும் தான் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் நேற்று அதிகாலை தன் வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நீட் தேர்வுக்கு தடை என்ற திமுகவின் வாக்குறுதியை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், ட்விட்டர் வாசி ஒருவர் ''நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இப்போது நீட் நடக்கிறது. பொய் சொன்னால் யாரையும் விட மாட்டேன் என்றீர்களே'' என்று நடிகர் சித்தார்த்தை டேக் செய்தார்.

அதற்கு ஆவேசமாக பதிலளித்த சித்தார்த், '' கோவமோ, சந்தேகமோ இருந்தா நீயே கேள், நான் என்னுடைய வேலையைத்தான் பார்க்க போறேன். ட்விட்டர கழிப்பறையா ஆக்கிட்டீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும்' என இவ்வாறு ஆவேசமாக பதிலளித்துள்ளார் சித்தார்த்.

No comments:

Post a Comment

Post Top Ad