தனுஷின் மரணத்திற்கு திமுக பொறுப்பேற்குமா? லாஜிக் இருக்கு பாஸ்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

தனுஷின் மரணத்திற்கு திமுக பொறுப்பேற்குமா? லாஜிக் இருக்கு பாஸ்..!

தனுஷின் மரணத்திற்கு திமுக பொறுப்பேற்குமா? லாஜிக் இருக்கு பாஸ்..!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து இன்று தற்கொலை செய்துகொண்ட சேலத்தை சேர்ந்த தனுஷ் மரணம் வெறும் செய்தியாகவே கடந்து போய்விடுமோ என்ற தயக்கம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்து, அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னர் நாடெங்கும் இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் மட்டும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒருபக்கம் நீட் தேர்வுக்கு மோடி அரசே காரணம் என்றும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கி போட்டுக்கொள்கின்றனர். இதில், அதிமுக நாங்களும் நீட்டிற்கு எதிராக சட்ட போராட்டங்களை நடத்தினோம் என்று கூறி தற்கொலைகள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்க தயாராக இல்லை.

சட்டமன்றத்தில் நீட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் முடிவு ஒன்றிய அரசிடமே உள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் நாளை தீர்மானம் கொண்டுவர உள்ளார் என அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தெரிவித்துள்ளார். தீர்மானம் கொண்டு வந்தால் அதிகபட்ச அழுத்தத்தை திமுக கொடுத்துவிட்டது என்று ஆகிவிடுமா என்று தெரியவில்லை.

நீட் ரத்து: கைவிரித்த உதயநிதி, மக்கள் போராட்டம் வந்தாதா முடியும் எனச் சூசகம்!

ஏனென்றால் அதைத்தான் அதிமுகவும் கடந்த முறை கொண்டு வந்தது. ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே நீட் ரத்து செய்யப்படும் என்றும் அரசியல் குழந்தைபோல உதயநிதி பொதுவெளியில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இன்று நீட் தேர்வை ரத்து செய்ய தன்னெழுச்சியான போராட்டம் நடைபெற வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பு மக்களும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்றும் வாக்குறுதி வலுவிழந்ததை போல பேசியது பல பேருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் நீட் தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு'' என கூறியுள்ளார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நீட் தேர்வை இங்கு ரத்து செய்ய முடியாது என்று அரசியல் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்

அதே வேளையில், நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, தமிழ் வழி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லி சொல்லி அவர்களது பயம் வலுவாகி தேர்வுக்கு தயாராகும் மனநிலையை இழந்து விடுகின்றனர். இதை செய்தால்தான் அது கிடைக்கும் என்ற மனநிலை இருந்துவிட்டால் குறைந்தபட்சம் மாணவர்கள் அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்வார்கள். ஆனால், விரைவில் சாத்தியப்படாத ஒன்றை சாத்தியப்படுத்துவோம், நாளைக்கு அதை செய்வோம், இன்று இதை செய்தோம் என்று கூறி வருவதால் தனுஷ் போன்ற மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இங்கு ஒன்றை நிறைவேற்றுவதற்கு கூட இழப்பு தேவை படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad