மீண்டும் முதலிடத்தில் ஐஐடி மெட்ராஸ்; NRIF தர வரிசையில் அசத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

மீண்டும் முதலிடத்தில் ஐஐடி மெட்ராஸ்; NRIF தர வரிசையில் அசத்தல்!

மீண்டும் முதலிடத்தில் ஐஐடி மெட்ராஸ்; NRIF தர வரிசையில் அசத்தல்!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படுத்த ’தேசிய நிறுவன
தரவரிசை கட்டமைப்பு’ உதவுகிறது. இது மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாகும். கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொறியியல் நிறுவனங்கள், மேலாண்மை நிறுவனங்கள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், கட்டிடக் கலை நிறுவனங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளைப் பொறுத்து தனித்தனி பிரிவுகளின் கீழ் தரவரிசைப் படுத்தப்படுகின்றன.

தரவரிசை காரணிகள்

இவை கற்பித்தல், கற்றல், வளங்கள் (TLR), ஆராய்ச்சி, தொழிற்கல்வி பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு (RPC), பட்டதாரிகள் உருவாக்கம் (GO), நிறுவன சென்றடைவு (OI), நிறுவனத்தின் கண்ணோட்டம் (PR) ஆகிய ஐந்து காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வரிசைப் படுத்தப்படும். இந்நிலையில் 6வது ஆண்டாக உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதலிடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ்

இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டுள்ளார். அதில், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்த படியாக ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஐடி பாம்பே, ஐஐடி டெல்லி, ஐஐடி கான்பூர், ஐஐடி காரக்பூர், ஐஐடி ரூர்கீ, ஐஐடி கவுகாத்தி, நியூடெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகம், வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

பொறியியல், மருத்துவத்தில் சிறந்த நிறுவனம்

இதேபோல் பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தில் காணப்படுகிறது. இதையடுத்து ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், ஐஐடி காரக்பூர், ஐஐடி ரூர்கீ, ஐஐடி கவுகாத்தி, ஐஐடி ஹைதராபாத், திருச்சி என்.ஐ.டி, சுரத்கால் என்.ஐ.டி ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முன்னிலை வகிக்கிறது. சிறந்த B-School பட்டியலில் முதலிடத்தில் ஐஐஎம் அகமதாபாத் உள்ளது.

பார்மஸி படிப்பில் ஜாமியா ஹம்தர்த் முன்னிலையில் இருக்கிறது. சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் டெல்லி மிராண்டா ஹவுஸ், டெல்லி லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, சென்னை

லயோலா கல்லூரி ஆகியவை முதல் மூன்று இடங்கள் உள்ளன. சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் எய்ம்ஸ் டெல்லி, PGIMER சண்டிகர், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆகியவை முன்னிலையில் இருக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad