கேள்வி கேட்ட வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்: ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 20, 2021

கேள்வி கேட்ட வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்: ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு!

கேள்வி கேட்ட வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்: ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு!


கேள்வி கேட்ட வழக்கறிஞரை காவல்துறையினர் தாக்கிய விவகாரத்தில் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
புகாரை பதிவு செய்து சான்றளிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்காக காவல் துறையினரால் தாக்கப்பட்டு, முதலுதவி வழங்காததால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த குருநாத் சுரேஷ் என்பவர், தனது விவசாய நிலத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து பயிர்களை சேதம் செய்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க, வழக்கறிஞர் பெரியசாமியுடன் தட்டார்மடம் காவல் நிலையம் சென்றுள்ளார். ஆனால், புகாரை பதிவு செய்த காவல்துறையினர் அதற்கு சான்றழிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால், புகாரை பதிவு செய்து சான்றளிக்காதது குறித்து வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜ், ஏட்டு மார்த்தாண்ட பூபதி உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து அந்த வழக்கறிஞரை தாக்கியதுடன், ஆபாசமாக திட்டி, முதலுதவி வழங்காமல், பொய் வழக்குபதிந்து, சட்டவிரோதமாக காவலில் வைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த 2018ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராகவும், சாத்தான்குளம் டி.எஸ்.பி.-க்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கோரி, வழக்கறிஞர் பெரியசாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், காவல் துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இத்தொகையில் உதவி ஆய்வாளரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயும், டி.எஸ்.பி.-யிடம் இருந்து ஒரு லட்ச ரூபாயும் மற்ற நான்கு பேரிடம் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வீதமும் வசூலிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பழமையான அகதீஷ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா விழா

மேலும், காவலர்கள் ஐந்து பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படியும் தமிழக டிஜிபி-க்கு மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் சுந்தரம், இதே நடவடிக்கைகளில் தொடர்ந்து, ஈடுபடுவதாக கூறப்படுவதால், அவரை சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியமர்த்த கூடாது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad