பெட்ரோல் டீசல் விலை: இன்றைய நிலவரம் இதுதான் மக்களே!
சென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.
பெட்ரோல் டீசல் விலை போட்டி போட்டு உயர்ந்து வந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும் டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்தது. அதன் பின்னர் தொடர்ந்து 48 நாள்களாக விலையில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை பாஜக அரசு அமல்படுத்தியது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிதமான விலையில் இருக்கிறபோதும், நம் நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் விலையால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.101.40ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.91.43 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளை நிம்மதியடையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment