புத்தாண்டு, பொங்கல் சிறப்பு தள்ளுபடி…அரசு கைத்தறி கண்காட்சி!
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 30% தள்ளுபடியில், அரசின் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார்.
கண்காட்சியில் அனைத்து வகையான பட்டு சேலைகள் வேட்டிகள், பட்டு வேஷ்டிகள், போர்வைகள், தலையணை உறைகள், அலங்கார பொருட்கள், ஜமுக்காளம் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் 30 % தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியதாவது:
" இந்த கைத்தறி கண்காட்சியின் இவ்வாண்டு இலக்கு ரூபாய் ஒரு கோடி என நிர்ணயிக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை உடனே கட்டுப்படுத்தும் வகையில் பூஸ்டர் வகை தடுப்பூசி கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் 15 வயது முதல் 18 வயது வரை கொடுத்துள்ளோம்.
நமது மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு இல்லை, சுமார் 50% மக்கள் முககவசம் அணிவதில்லை. முதலாவது அலை போன்று இரண்டாவது அலை பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஒமிக்ரான் மிக வேகமாக பரவக்கூடியது.
பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகள் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே மாஸ்க் அணிந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது 87 % வரை முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் 58% தான் போடப்பட்டுள்ளது.
11 % பொதுமக்கள் முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். மீதமுள்ளவர்களும் உடனடியாக போட வேண்டும். இரண்டாவது டோஸ் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் போடாமல் உள்ளனர். அவர்களும் தடுப்பூசி போட்டால் மட்டுமே, ஒமிக்ரான் அலையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
திருச்சியை பொருத்தவரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்பிற்கான சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தற்போது பழைய கட்டிடங்கள் 410 அடையாளம் காணப்பட்டு அவற்றில் 130 கட்டிடங்கள் சீர்படுத்துவதற்காக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 280 பழுதடைந்த பழைய கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது", இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment