ஏழுமலையான் தரிசனத்திற்கு புது கட்டுப்பாடு; திருப்பதி தேவஸ்தானம் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 29, 2021

ஏழுமலையான் தரிசனத்திற்கு புது கட்டுப்பாடு; திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

ஏழுமலையான் தரிசனத்திற்கு புது கட்டுப்பாடு; திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!




திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் வைகுண்ட ஏகாதசி அன்று வழிபட முக்கிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வகித்து வருகிறது. கோயில் பராமரிப்பு, பக்தர்களுக்கான வசதிகள் மட்டுமின்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நடவடிக்கைகளில் தேவஸ்தானம் ஈடுபட்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேவஸ்தானத்தின் கீழ் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. தற்போது கொரோனா, ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி அன்று திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாராயணவனம், நாகலாபுரம், கார்வேட்டி நகரம், நகரி உள்ளிட்ட கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் திறக்கப்பட உள்ளது. இதை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். தற்போது ஒமைக்ரான் வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

எனவே திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வைரஸ் பரவலுக்கு இடம்கொடுக்காத வகையில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பக்தர்கள் கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கோவிட் பரிசோதனை மேற்கொண்டதற்கான நெகடிவ் சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கோயில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

இதற்காக அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் பக்தர்களிடம் தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பின்னரே, கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தடுப்பூசி போடாத பக்தர்கள் உடனடியாக அதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகிறது.

 

No comments:

Post a Comment

Post Top Ad