திமுக ஆளுங்க டார்ச்சர் கொடுக்குறாங்க... வேலூர் எஸ்ஐ தற்கொலை மிரட்டல் ஆடியோ!
தம்மை பணி செய்யவிடாமல் திமுக பிரமுகர்கள் தந்துவரும் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வேலூர் காவல் துறை எஸ்ஐ வெளியிட்டுள்ள ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் மாவட்டம், வேப்பங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., யாக பணியாற்றி வருபவர் சீனிவாசன். 50 வயதான இவர், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், "வேப்பங்குப்பம் எஸ்.ஐ., யாக பணியாற்றி வருகிறேன். டிசி குப்பத்தை சேர்ந்த துளசியம்மாள் என்பவர் 10 லட்சம் ரூபாய் சீட்டு நடந்தினார். சீட்டு எடுத்தவர்களுக்கு தள்ளுபடி போக மீதி பணத்தை அவர் கொடுக்கவில்லை. இதை இன்ஸ்பெக்டர் உலகநாதன் சரியாக விசாரணை நடத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பணம் கேட்டு சென்றவர்களுக்கும், அந்த பெண்ணுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த துளசியம்மாள் வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் வாக்குமூலம் வாங்க சென்றபோது அங்கு வந்த திமுக பிரமுகர்கள் சிலர் வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுத்தனர். வழக்கு பதிவு செய்யாத காரணத்தை உயர் அதிகாரிகளிடம் கூறிவிட்டேன்.
இங்கு மணல் கடத்தினாலும் வழக்கு பதிவு செய்யக்கூடாது என திமுக பிரமுகர்கள் சிலர் டார்ச்சர் செய்கின்றனர். எனக்கு மனஉளைச்சல் அதிகமாக உள்ளது. என்னால் வாழ முடியவில்லை; நான் போயிடுகிறேன், விட்டிடுங்க. அதனால் நான் இன்றைக்கு, (29 ம் தேதி) இரவு தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என்னோட பணத்தை அரசு கிட்ட இருந்து வாங்கி மனைவி, குழந்தைகிட்டே கொடுத்திடுங்க' என்று தமது ஆடியோவில் எஸ்ஐ சீனிவாசன் உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆடியோவில் பாபு, பிரகாஷ், மணிமாறன் உள்ளிட்ட நான்கு திமுக பிரமுகர்கள் தங்களை மிரட்டியதாக சீனிவாசன் குறிப்பிட்டுள்ளத வேலூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment