உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? -ஹெச்.ராஜா கருத்து இதுதான்!
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தருவது குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, 'இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்களை தமிழக மீனவர்களும் பயன்படுத்தினால் பிரச்னை எழாது. சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் காங்கிரஸ் கட்சி பிற மாநிலங்களில் ராஜீவ் கொலையாளிகளை பாஜக விடுதலை செய்ததாக குற்றம்சாட்டி பிரச்சாரம் மேற்கொள்ளும். எனவே, 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா கூலாக பதிலளித்தார்.
திமுக மற்றும் அக்கட்சியின் ஆட்சியை பெரும்பாலும் விமர்சனம் செய்யும் ஹெச்.ராஜா, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என அண்மையில் கொளுத்தி போட்டார். ஆனால் தமக்கு அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று உதயநிதி, கோவையில் அண்மையில் ஓபன்டாக்காக தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment