மாணவர்கள் பள்ளி செல்ல கூடாது; நவீன நீதிபதிக்கு சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 17, 2021

மாணவர்கள் பள்ளி செல்ல கூடாது; நவீன நீதிபதிக்கு சிக்கல்!


மாணவர்கள் பள்ளி செல்ல கூடாது; நவீன நீதிபதிக்கு சிக்கல்!


மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்ல கூடாது என்று உத்தரவு போட்டு கெத்து காட்டிய பஞ்சாயத்து தலைவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்டது தாமோதரன்பட்டிணம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன் ஐயப்பன் என்பவர் கடந்த 3 முறையாக பஞ்சாய்த்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் உள்ளிட்ட சிலர் கோயில் கணக்கு வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் கணக்கு கேட்கும் தரப்பினர் தனக்கு கண்டிப்பாக வாக்களித்து இருக்க மாட்டார்கள் என முடிவு எடுத்துள்ள பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

அதன்படி கணக்கு கேட்ட சண்முகம் தரப்பை சேர்ந்த 30 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று அதிரடியாக உத்தரவு போட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம் கவனத்துக்கு பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு சென்றும், இதுவரை எந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதன் விளைவாக தற்போது 30 குடும்பத்தினரை கிராமத்தில் உள்ள மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கவோ, பொதுவான குளத்தில் குளிக்கவோ, பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவோ விடாமல் பல்வேறு வகையில் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

எனவே கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்த ஐயப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திருவாடானை வட்டாட்சியர் செந்தில்வேல் முருகனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தனி நபரின் அராஜகத்தால் 30 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad