பரவும் ஓமைக்ரான்.. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து.. பயணிகள் பெரும் அவதி
ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் புதுப் புது கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக ஆவலாக காத்திருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவி வரும் ஓமைக்ரான் பல நாடுகளிலும் ஊடுறுவியுள்ளது. இதையடுத்து நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. அதில் ஒரு பகுதியாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் விமான பயணம் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக செல்லவிருந்தோர், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காத்திருப்போர் என அனைத்துத் தரப்பினரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.
இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளில் வெளியில் வந்தாலே கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்பெயினின் கலடோனியா பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்பபடுத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதீதமாக பரவல் உள்ளது. அமெரிக்காவிலும் பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினமான வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் பெரும் சிக்கலுக்குள்ளானார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், விமானிகள் அல்லது விமான பணியாளர்கள் பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிப்போர்ட் வந்ததே என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, லெசோத்தோ, ஸ்வாடினி, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளுக்கு கடந்த நவம்பர் 29ம் தேதி முதல் விதிக்கப்பட்ட விமான தடையை டிசம்பர் 31ம் தேதியன்று நீக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் நேற்று நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல பயணிகளுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தென் கொரியா, தாய்லாநது, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஓமைக்ரான் பரவல் குறையும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment