காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இத்தாலி சென்றார்!
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி இத்தாலி புறப்பட்டு சென்றுள்ளார்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தொடரில், பிரதமர் மோடி அறிவித்தது போல விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த போதும், விவசாயிகள் பெருமளவில் டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதும், வாபஸ் பெறப்படாத இந்த சட்டங்கள் எதிர்வரவுள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி வாபஸ் பெறப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவரான காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி இன்று அதிகாலை 4 மணியளவில் இத்தாலி புறப்பட்டு சென்றுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஒமைக்ரான் பரவலால் உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வழியாக அவர் இத்தாலி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இன்னும் சில நாட்களுக்கு இந்தியாவில் இருக்கமாட்டார் எனவு, ஜனவரி 15ஆம் தேதி வரை அவர் வெளிநாட்டில் இருப்பார் எனவும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, ராணுவ தலையீடுகள் இருக்கும் போதிலும்கூட, இந்தியா-சீனா வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களைத் தாண்டியது குறித்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்திருந்தார். சீன ஊடுருவல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இடையே, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் குறித்து காந்தி கருத்துத் தெரிவிக்கையில், “மேட்-இன்-சீனாவின் உள்நாட்டுப் புறக்கணிப்புகளுக்கு மத்தியில், சீனாவின் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது, இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக அளவு நவம்பர் மாதத்திற்குள் 100 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது” என Global Timesஇன் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
சீன ஊடுருவலுக்குப் பிறகு, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகம் குறித்து காந்தி கருத்துத் தெரிவிக்கையில், மேட்-இன்-சீனாவின் உள்நாட்டுப் புறக்கணிப்புகளுக்கு மத்தியில், சீனாவின் செயலிகளை மத்திய அரசு தடை செய்தது, இருந்தபோதிலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக அளவு நவம்பர் மாதத்திற்குள் 100 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. சீன பொது நிர்வாகத்தின் சுங்கத்தின் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment