அமைச்சர் பகீர்..திமுக ஆட்சியில் தான் பாலியல் புகார்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 29, 2021

அமைச்சர் பகீர்..திமுக ஆட்சியில் தான் பாலியல் புகார்கள்!

அமைச்சர் பகீர்..திமுக ஆட்சியில் தான் பாலியல் புகார்கள்!



கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும் தற்போதைய திமுக ஆட்சியில் பாலியல் புகார்கள் அதிகரித்துள்ளதாக திமுக அமைச்சர் ஒருவரே வாக்குமூலம் அளித்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் தொடர்பான புகார்கள் கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது தான் அதிகமான அளவில் வருகின்றன. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

மதுரை கே.கே. நகரில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது: “தமிழக முதல்வர் பட்ஜெட் உரையில் அறிவித்ததன் அடிப்படையில் மண்டல அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்திலுள்ள 19 மாவட்டங்களுக்கு குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த அலுவலகம் நேரடியாக இயங்கும். பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும்.

பாலியல் தொடர்பான புகார்கள் கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போதுதான் அதிகமான அளவில் வருகின்றன. அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்படுகின்றன. குழந்தைகள் பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில், தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களையே பயன்படுத்தாத நிலை, கடந்த 10 ஆண்டுகளாக இருந்தது.

பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக உள்ள சிறார் நீதி சட்டத்தின்படியே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களில் நடைபெறும் குழந்தைகள் திருமணம் குறித்து அறிந்தவர்கள் உடனடியாக தகவல் தர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் அண்மையில் தமிழகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டுள்ளன”, இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad