ஏழுமலையான் பக்தர்கள் ஏமாற்றம்; கடைசி நேரத்தில் மாற்றிய திருப்பதி தேவஸ்தானம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 25, 2021

ஏழுமலையான் பக்தர்கள் ஏமாற்றம்; கடைசி நேரத்தில் மாற்றிய திருப்பதி தேவஸ்தானம்!

ஏழுமலையான் பக்தர்கள் ஏமாற்றம்; கடைசி நேரத்தில் மாற்றிய திருப்பதி தேவஸ்தானம்!



இலவச தரிசன டிக்கெட்கள் முன்பதிவிற்காக காத்திருந்த பக்தர்கள் பலரும் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் வரும் ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. அதாவது, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் கடந்த 24ஆம் தேதி வெளியானது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ஜனவரி 13ஆம் தேதி நடைபெறும் வைகுண்ட வாசல் தரிசனத்திற்கும் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் 4.6 லட்சம் தரிசன டிக்கெட்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 9 மணிக்கு வெளியான நிலையில், அடுத்த சில நிமிடங்களில் 14 லட்சம் பேர் உள்ளே நுழைந்தனர்.

55 நிமிடங்களில் ஜனவரி மாதத்திற்கான ஒட்டுமொத்த டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளன. இதனை திருப்பதி தேவஸ்தானம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 1, 2, 13, 22, 26 ஆகிய தேதிகளில் தரிசனத்திற்கு 5,500 டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. இவை அனைத்தும் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இலவச தரிசன டிக்கெட்கள் நேற்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்படாதது பக்தர்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியது. ஒருவேளை ஒமைக்ரான் அச்சம் காரணமாக டிக்கெட் முன்பதிவை ஒத்தி வைக்கவோ அல்லது ரத்து செய்யவோ தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2022 ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன்கள் வரும் டிசம்பர் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும். ஜனவரி 13 முதல் 22 வரையிலான வைகுண்ட துவார தர்சன நாட்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் ஒதுக்கப்படுகின்றன.

எஞ்சிய நாட்களில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் ஆன்லைனில் வெளியிடப்படவுள்ளது. இதனை ஏழுமலையான் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப இலவச தரிசன டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட RT-PCR நெகடிவ் சான்று கொண்டு வர வேண்டும்

என்ற கட்டுப்பாட்டை திருமலைக்கு வரும் பக்தர்கள் சரியாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அலிபிரி சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்று அல்லது நெகடிவ் சான்று இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் கோயில்களில் வைரஸ் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad