மீண்டும் முழு ஊரடங்கு - மறு உத்தரவு வரும் வரை... அரசு அதிரடி!
முழு ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன்முறையாக பரவியது. இதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மீண்டும் பரவி வருகிறது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது உருமாற்றம் அடைந்து கொண்டே வருவது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் புதிய அவதாரம் எடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றின் பிறப்பிடமான சீனாவின் வடக்கில் உள்ள சியான் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் மாகாணத்தில், கடும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.
அந்த மாகாணத்தில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கொரோனா தொற்று உயர்ந்து வருவதை அடுத்து மறு உத்தரவு வரும் வரை சியான் மாகாணத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment