சொகுசுக் கப்பலில் 143 பேருக்கு கொரோனா.. பயணிகள் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

சொகுசுக் கப்பலில் 143 பேருக்கு கொரோனா.. பயணிகள் அதிர்ச்சி!

சொகுசுக் கப்பலில் 143 பேருக்கு கொரோனா.. பயணிகள் அதிர்ச்சி!மும்பைக்கு வந்த சொகுசுக் கப்பலில் பயணித்த 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவாவில் இருந்து மும்பைக்கு வந்த சொகுசுக் கப்பலில் கூடுதலாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவாவில் இருந்து மும்பைக்கு வந்த கார்டெலியா சொகுசுக் கப்பலில் பயணித்த 66 பயணிகளுக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் தற்போது கூடுதலாக 143 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளது. கார்டெலியா சொகுசுக் கப்பல் நேற்று மாலை மும்பைக்கு வந்து சேர்ந்துள்ளது. இதில் பயணித்த 1827 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள சர்வதேச சொகுசு கப்பல் முனையத்தில் கார்டெலியா சொகுசுக் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களிடம் நேற்று இரவு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக மும்பை மாநகராட்சி தலைமை சுகாதார அலுவலர் டாக்டர் மங்களா கோமரே தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 66 பேர், இப்போது 143 பேர் என மொத்தம் 209 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை சொகுசுக் கப்பலில் இருந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஐந்து ஆம்புலன்ஸ்களுக்கு மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad