குடிநீர் இணைப்புகள்...2 நாட்கள் அவகாசம் தந்த கலெக்டர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

குடிநீர் இணைப்புகள்...2 நாட்கள் அவகாசம் தந்த கலெக்டர்!

குடிநீர் இணைப்புகள்...2 நாட்கள் அவகாசம் தந்த கலெக்டர்!

குடிநீர் இணைப்புகள் பெறுவதற்கு 2 நாள் அவகாசம் அளித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தென்காசி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு புதிய வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கிட விண்ணப்பங்கள் பெறுவதற்கு 6-1-2022 (வியாழக்கிழமை) மற்றும் 7-1-2022 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

எனவே புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பும் பயனாளிகள் விண்ணப்பங்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திலோ அல்லது https://tenkasi.nic.in/form-category/town-panchayat-forms/ இணையதளத்திலோ விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து நடப்பு ஆண்டுக்கு உரிய சொத்து வரி செலுத்தப்பட்ட ரசீது நகல், பதிவு கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகைக்கு வரைவோலை ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad