மணிக்கு 48 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்க வந்த விண்கல்.. நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
விண்கல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விண்வெளிகளில் பல விண்கற்கள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இப்படியான விண்கற்கள் பூமியில் மோதிய சம்பவங்களும் இதற்கு முன்னர் பல நடந்துள்ளன. இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த ஜனவரி 12ம் தேதி அவர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு அனிமேஷன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில் ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று (19ம் தேதி) அதிகாலை 2.45 மணிக்கு பூமியை இந்த விண்கல் மிக நெருக்கமாக கடந்துள்ளது. இந்த விண்கல்லிற்கு 7482 என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டிருந்தனர்.
இந்த விண்கல் சுமார் 3450 அடி உயரம் கொண்டது. உலகின் உயரமாக கட்டிடமான புர்ஜ் கலிஃபாவை விட 700 அடி அதிக உயரம் கொண்டது. இந்த விண்கல், இது மணிக்கு 45 ஆயிரம் மைல் வேகத்தில் விண்ணில் பறந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் இன்று பூமியிலிருந்து வெறும் 19.3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்துள்ளது. இது தூரம் அதிகமாக இருந்தாலும் நாசாவின் சில தொழிற்நுட்ப உதவியால் இந்த விண்கலை இங்கிருந்தே காண முடிந்ததாம்.
இதே போல இந்த மாதம் மட்டும் 5 விண்கற்கள் பூமியை மிக நெருக்கமாக கடக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக பல சிறிய விண்கள் பூமியின் மீது மோத வரும். ஆனால் அது பூமிக்கு அருகே வரும் போது எரிந்து சாம்பலாகிவிடும். இதனால் பூமிக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படும். வெகு அரிதாக பூமியில் விண்கல் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டு பூமிக்கு மிக நெருக்கமாக அதாவது வெறும் 43 ஆயிரம் கி.மீ தொலைவில் ஒரு விண்கல் கடந்துள்ளது. இது தான் இதுவரை மிக நெருக்கமாக கடந்த விண்கல்லாகும்.
No comments:
Post a Comment