Pandian Stores: மீனாவால் ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் கண்ணன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 19, 2022

Pandian Stores: மீனாவால் ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் கண்ணன்!

Pandian Stores: மீனாவால் ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் கண்ணன்!


பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
ஐஸ்வர்யாவிடம் பேசிவிட்டு தனியாக உட்கார்ந்து இருக்கும் மூர்த்தியிடம் வந்து பேசுகிறாள் தனம். குழந்தையை பற்றி சந்தோஷமாக சொல்லிவிட்டு, முல்லை கொஞ்ச நாளாவே சரியில்லை என சொல்கிறாள். அதன்பின்னர் தனம் நடந்ததை சொல்லி, ரெண்டு பேரையும் ஹாஸ்பிட்டல் போய் பார்க்க சொல்லிருக்கேன் என்கிறாள். இந்த விஷயமா பேசும் போது ரொம்ப அழுதா, அதான் போய்ட்டு வர்ற சொன்னேன் என கூறுகிறாள்.
மூர்த்தியும் அதெல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது. ரெண்டு பேருக்கும் நல்லபடியா குழந்தை பிர்க்கும்ன்னு டாக்டர் சொல்வாங்க பாரு என்கிறாள். அதன்பின்னர் கதிரை பார்த்து பேசுகிறான் மூர்த்தி. ஹாஸ்பிட்டல் போய் பார்த்துட்டு டாக்டர் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டா, முல்லை சந்தோஷமா இருப்பாள்ள. எந்த பிரச்சனையும் இருக்காது. டாக்டர் போய் பார்த்துட்டு வாங்க என்கிறான்.

கதிரும் சரியென சொல்கிறான். அவனை தைரியமாக இருக்க சொல்லிவிட்டு மூர்த்தி சென்றுவிடுகிறான். இதனிடையில் ஐஸ்வர்யா பார்ட் டைம் வேலை தேடுவதாக கண்ணனிடம் சொல்கிறாள். இப்போ மீனா அக்கா கேட்ட கேள்வியை நாளைக்கு தெருல போறவங்களும் கேப்பாங்க. இன்னைக்கு கூட மூர்த்தி மாமா கிட்ட கடைலயே வேலை கேட்டேன் என சொல்கிறாள். இதனை கேட்டு பதட்டமடையும் கண்ணன், ஏன் ஐசு இப்படி பட்டுபட்டுன்னு ஏதாவது கேட்ற என்கிறான்.

அவளும் இல்லை கண்ணா. மீனா அக்கா சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு. உன்னை படிக்க வைக்குறது கூட அவுங்க கடமை. ஆனால் நான் அப்படி இல்லைல என சொல்கிறாள். ஆனாலும் கண்ணன் இதுக்கு எல்லாம் வீட்ல சம்மதிக்கவே மாட்டாங்க என சொல்கிறான். அதற்கு ஐஸ்வர்யா ஒன்னு நம்ம வேலைக்கு போய் படிக்கணும். இல்லன்னா காலேஜ் விட்டு நிற்கணும் என சொல்லிவிட்டு வேலைக்கு போவதில் உறுதியாக இருக்கிறாள் ஐஸ்வர்யா.

இதனிடையில் தூங்காமல் இருக்கும் முல்லையை சமாதானம் செய்து படுக்க வைக்கிறான் கதிர். அவள் தூக்கத்தில் அலறி கொண்டு எந்திரிக்கிறாள். என்னாச்சு என கதிர் பதற்றத்துடன் கேட்கும் போது, ஒரு கெட்ட கனவு என சொல்கிறாள். அதன்பின்னர் மீண்டும் அவளை சமாதானம் செய்து தூங்க வைக்கிறான் கதிர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad