தனுஷ்-ஐஸ்வர்யா சமரசப்பேச்சு..!பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா?
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை ஒன்று சேர்க்க அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சமரசப்பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக சில நாட்களுக்கு முன் அறிவிதித்திருந்தனர். இவர்களது பிரிவு செய்தி சமூகத்தளங்களில் பேசும்பொருளாக உருவெடுத்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்தார்கள். இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உண்டு.
18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பிரிவதாக இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இச்செய்தியை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்களுக்கு இது அதிர்ச்சிகரமாக இருந்தது. பல ரசிகர்கள் இவர்களுக்கு ஆறுதல் கூறிவந்தாலும் சிலர் பல வதந்திகளை பரப்பி கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இவர்கள் பிரிவிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்பிரிவு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதே பொதுவான கருத்தாக இருக்கின்றது. தனுஷ் ஹிந்தி படங்களில் நடிக்கும்போதுதான் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட துவங்கியது என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இடைப்பட்ட கொரோனா ஊரடங்கு காலத்தில் இருவருக்குள்ளும் அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது பிரிந்திருக்கக்கூடும் என்பது ரசிகர்களின் கணிப்பாக உள்ளது.
இந்நிலையில் இவர்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பலரும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவை எட்ட முயற்சித்துவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்புகூட தனுஷின் சகோதரரான செல்வராகவன் ட்விட்டர் மூலம் பல கருத்துக்களை தெரிவித்து வந்தார். யோசித்து முடிவெடுங்கள் அவசரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்காது என பல கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இதைபோல் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு நெருக்கமான பலரும் அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தனுஷ் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவரை தொடர்புகொள்ள கஷ்டமான சூழ்நிலை நிலவுவதால் ஐஸ்வர்யாவிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவது சகஜம்தான், இரண்டு பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என அறிவுரை கூறிவருவதாக செய்திகள் வருகின்றன. தனுஷிடமும் நேரம் கிடைக்கும்போது இதைப்பற்றி சிலர் பேசிவருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் பேச்சை கேட்டு இருவரும் மனம் மாரி மீண்டும் ஒன்றுசேர்ந்தாள் நன்றாக இருக்கும் என்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பொதுக்கருத்தாக உள்ளது. எனவே இவர்களின் பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment