அந்த காட்சிகளில் நடிக்க ஐம்பது லட்சம்..கண்டிஷன் போடும் தனுஷ் பட நடிகை..!
ரவுடி பாய்ஸ் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க அனுபமாவிற்கு ஐம்பது லட்சம் சம்பளம்
மலையாளத்தில் வெளிவந்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த திரைப்படம் ப்ரேமம். நிவின் பாலி நாயகனாக நடித்த இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.
முதல் படமே மெகாஹிட்டானதால் அனுபமா பரமேஸ்வரன் பிரபலமானார். பின்பு தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான கொடிபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு தெலுங்கு மலையாளம் என பிஸியானார் அனுபமா.
சமீபத்தில் தமிழில் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளி போகாதே படத்தில் நாயகியாக நடித்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகிவரும் ரவுடி பாய்ஸ் பட ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. ட்ரைலரை பார்த்த அனைவரும் நம்ப அனுபமாவா இது என ஷாக்காகினர்.
படத்தில் சற்று கிளாமர் தூக்கலாக நடித்திருக்கிறார் அனுபமா. இதுவரை சாதுவான, குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனுபமாவை கிளாமர் கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. மேலும் இப்படத்தின் முதல் முறையாக லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார் அனுபமா.
ட்ரைலரில் இடம்பெற்ற அக்காட்சி இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இதுபோன்ற நெருக்கமான காட்சிகள் பல இப்படத்தில் இருப்பதாகவும் படக்குழு சொல்லியிருப்பதாக தகவல். இந்நிலையில் இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க அனுபமா ஐம்பது லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
பொதுவாக அனுபமா மற்ற படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை விட இது பல மடங்கு அதிகமாம். இதுபோன்ற காட்சிகளில் இதுவரை நடிக்காத அனுபமா தற்போது தன் முடிவை மாற்றியுள்ளார்.. சினிமாவில் பல நடிகைகள் கிளாமர் ரோலில் கலக்குவதைபோல் தானும் இனி கிளாமர் பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அனுபமா முடிவெடுத்திருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment