Bharathi Kannamma: வெண்பா வீட்டில் தங்க முடிவு செய்த பாரதி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
பாரதி கண்ணம்மா நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.
வெண்பா வீட்டுக்கு போன பாரதி ஹேமாவை பேட்மிட்டன் கிளாஸ் சேர்த்துவிடலாம்ன்னு இருக்கேன் எனக் கூறுகிறார். அவளிடம் கோர்ட்டு தீர்ப்பு படி 6 மாசம் நான் கண்ணம்மா கூட சேர்ந்து வாழணும். ஆனா எனக்கு அதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. நான் ஆறு மாசம் இங்க தங்கிட்டுமா என பாரதி கேட்கிறான். உடனே உற்சாகமான வெண்பா நீ எவ்வளவு நாளானாலும் தங்கிக்கோ என சொல்கிறாள்.
ஆனா ஒரு கண்டிஷன் நான் மட்டும் இங்க வர மாட்டேன் ஹேமாவும் கூட்டிட்டு தான் வருவேன். ஹேமா இல்லாம என்னால இருக்க முடியாது என பாரதி கூறுகிறான். இதனால் கடுப்பான வெண்பா, உன் கூட தனிமையில் சந்தோஷமாக இருக்கலாம்னு நினைச்சா இந்த ஹேமாவை கூட்டிட்டு வரேன்னு சொல்ற, முதல்ல சரின்னு சொல்லுவோம். அப்புறம் பார்த்துக்கலாம் என மனதிற்குள் கணக்கு போடுகிறாள் வெண்பா. பாரதியிடம் சரியென சொல்கிறாள்
இதனிடையில் குமார் தங்கச்சியை பொண்ணு பார்க்க வந்தவர்கள் கண்ணம்மா புருஷனோட இல்லாதவர். இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கு அவர் எப்படி முன்னாடி வந்து நிற்கலாம் என கண்டபடி பேச பிறகு லட்சுமி அவர்களை எதிர்த்துப் பேச இந்த பொண்ணு வேண்டாம் என கிளம்பி விடுகின்றனர். கிளம்பிய அவர்களை கண்ணம்மா நிற்க வைத்து இன்னும் சில நாட்கள்ல என்னோட பிறந்த நாள் நிகழ்ச்சி எங்க வீட்ல நடக்கப் போகுது. அன்னைக்கு என் பொண்ணோட அப்பா யாரென்று சொல்ல போறேன். வந்து பார்த்துக்கோங்க என கூறுகிறாள்.
No comments:
Post a Comment