gold rate: நகை ரேட் கம்மி.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!
சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று (ஜனவரி 31) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,527 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,533 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 48 ரூபாய் குறைந்து 36,216 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,899 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,893 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 39,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 48 ரூபாய் குறைந்து 39,144 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை!
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.65.50 ஆக இருந்தது. இன்று அது ரூ.65.40 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment