லாக்டவுன் ஓவர்… பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி உண்டா?
கோவில் அடிவாரத்திலிருந்து 900மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிமார், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது. கோவில் அடிவாரத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
பல்லடம் அருகே கல் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் ஆலோசனை!
பஞ்சலிங்க அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்தது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அருவியில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது. திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா வருகின்ற பயணிகள் அருவிக்கு சென்று குடும்பத்துடன் உற்சாகத்தோடு குளித்து வருகின்றனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி வெளிமாவட்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.
பின்னர் அருவிக்கு சென்று அங்குள்ள அருவியில் விழுகின்ற தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதன் பின்பு அடிவாரப் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.
இன்று லாக்டவுன் இல்லாததாலும்,வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பஞ்சலிங்க அருவியில் குளித்து விட்டு சென்றனர்.
No comments:
Post a Comment