ஓமைக்ரான் பரவல் படு வேகமாக இருக்கும்.. எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

ஓமைக்ரான் பரவல் படு வேகமாக இருக்கும்.. எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன்

ஓமைக்ரான் பரவல் படு வேகமாக இருக்கும்.. எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன்



ஓமைக்ரான் பரவல் படு வேகமாக இருக்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஹூ நிபுணர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் படு வேகமாக இருக்கும் என்று ஹூ அமைப்பின் நிபுணரான சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

கொரோனாவைரஸின் புதிய வகை வேரியன்ட்டான ஓமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் இது பாதிப்பைத் தருவதில்லை என்ற போதிலும் கூட பாதிப்படைவோர் அதிக அளவில் இருப்பதாலும், இதன் பரவல் வேகம் அதிகமாக இருப்பதாலும் பீதி நிலவுகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலும் தற்போது ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க ஆரம்பித்துள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பகல் நேர ஊரடங்கு எந்த மாநிலத்திலும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஓமைக்ரான் பரவல் குறித்து ஹூ நிபுணர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ள புதிய கருத்துக்கள் வருமாறு:

இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் மிக வேகமாக இருக்கும். மருத்துவ தேவைகள் அதிகரிக்கும். மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். உலகம் முழுவதும் ஏற்கனவே ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரை விட அவுட் பேஷன்ட் பிரிவுகளில்தான் அதிக அளவில் கூட்டம் அலைமோதும். ஐசியூக்களை விட வீடுகளிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வோர் அதிகரிப்பார்கள். மக்கள் கவலைப்படுகின்றனர். ஆனால் அசட்டையாக உள்ளனர். இன்னும் மக்களிடையே அலட்சியம் இருக்கிறது. இதுதான் கவலை தருகிறது.

பலருக்கு அறிகுறிகளே தெரியாது. ஆனால் எப்படி தங்களுக்கு கோவிட் வந்துள்ளது என்பதை அறிய மக்களுக்கு மருத்துவ வழிகாட்டுதல் தேவைப்படும். அதற்கு நாம் தயாராக வேண்டும். ஆன்லைன் ஆலோசனைகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். யாரும் மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை கேட்டுக் குவியாமல் இருக்க தொலைத் தொடர்பு கால் சென்டர்களை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே இருந்தால் அதை அதிகரிக்க வேண்டும்.

மருத்துவத்தை விட மருத்துவ ஆலோசனை தொடர்பான சேவைகளுக்குத்தான் அதிக தேவை ஏற்படும். மேலும் ஓபி வார்டுகளில் போதிய அளவுக்கு டாக்டர்கள், நர்ஸ்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வீடுகளிலேயே சிகிச்சை தர வேண்டியிருக்கும். அதற்கேற்ற வசதிகளையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய கேஸ்கள் குறைவாகவே இருக்கும். எனவே ஐசியூ உள்ளிட்ட நெருக்கடிகள் பெரிதாக இருக்காது.

ஆனால் மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமாகும். சாதாரண காய்ச்சல், சளிதானே என்று விட்டு விடக் கூடாது. அதுதான் கவலை தருகிறது. மக்கள் விழிப்புணர்வு மிக மிக அவசியம். ஓமைக்ரான் பாதிப்பு குறைவு என்றாலும் அது பரவல் வேகம் டெல்டா வகையை விட 4 மடங்கு அதிகமாகும். எனவே மக்கள் மிக மிக கவனமாக இருந்தால்தான் மருத்துவமனைகளில் கூட்டத்தை சமாளிக்க முடியும் என்றார் சவுமியா.

No comments:

Post a Comment

Post Top Ad