திகிலுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்; திடீர் கட்டுப்பாடு விதிப்பால் திகைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

திகிலுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்; திடீர் கட்டுப்பாடு விதிப்பால் திகைப்பு!

திகிலுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்; திடீர் கட்டுப்பாடு விதிப்பால் திகைப்பு!ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், இன்று பலத்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், நெல்லை மாவட்டத்தில் 12 மையங்களில் நடைபெற்றது. இதில் 3500 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கம்பைன்டு ஸ்டேட்டிஸ்டிகல் சப் ஆர்டினேட் போட்டித் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. ஆனால் அன்று முழு ஊரடங்கு என்பதால் அத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 11ஆம் தேதி இன்று நடத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது

இன்று தமிழகம் முழுதும் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகர் முழுவதும் 12 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 3,553 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

முன்னதாக 8.30 மணி முதலே தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரனோ 3ம் அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.

அதன்படி தேர்வர்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் நுழைவாயிலில் தேர்வகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பிற்பகலும் இத்தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad