ஆஞ்சநேயருக்கு வந்த சோதனை; கண்ணீர்விட்டு கதறிய பக்தர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

ஆஞ்சநேயருக்கு வந்த சோதனை; கண்ணீர்விட்டு கதறிய பக்தர்கள்!

ஆஞ்சநேயருக்கு வந்த சோதனை; கண்ணீர்விட்டு கதறிய பக்தர்கள்!


ஆஞ்சநேயருக்கே வந்த திடீர் சோதனை பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. துக்கம் தாங்க முடியாமல் ஏராளமான பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வரதராஜபுரம் அடையாறு கால்வாய் நீர்நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து நரசிம்மா ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோயில் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருப்பதை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து ஆஞ்சநேயர் கோவில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக கூறி கோவிலை இடிக்க உள்ளதாக வருவாய் மற்றும் நீர்வளஆதார துறையினர் சமீபத்தில் நோட்டீஸ் வழங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆஞ்சநேயர் பக்தர்கள் வழிபாட்டில் உள்ள கோவிலை இடிக்கக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 19ம் தேதி கோயிலை இடிப்பதற்காக அதிகாரிகள் வந்தனர். உடனே அங்கிருந்த பக்தர்கள் கோவிலுக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.


அப்போது சிலர் கோயிலின் கோபுர உச்சிக்கு சென்று ‘ஆஞ்சநேயர் கோவிலை இடிக்கக்கூடாது’ என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடினர். இதனால் அதிகரிகள் கோவிலை இடிக்காமல் திரும்பி சென்றனர்.

இதற்கிடையே பக்தர்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, தமிழக அரசுக்கும் இந்துசமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கும் மனுக்களை அனுப்பி வைத்து கோயிலை இடிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருந்த கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்ததையொட்டி இன்று அதிகாரிகள் கோயிலை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்க முற்பட்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் உதவி கமிஷனர் மற்றும் மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர், வாக்குவாதம் செய்து கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதன் பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் கோயில் மற்றும் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

இடிந்து விழுந்த கோபுரத்தை பார்த்து 'ராமா....ராமா’ என பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மக்கள் வழிபாட்டில் இருந்த கோவிலை அரசு அதிகாரிகள் இடித்து தள்ளியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் கோயிலை இடித்து அகற்றி, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad