தமிழகத்தில் கடைகளின் நேரம் குறைப்பு; போக்குவரத்து கட்டுப்பாடு: வெளியான தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 10, 2022

தமிழகத்தில் கடைகளின் நேரம் குறைப்பு; போக்குவரத்து கட்டுப்பாடு: வெளியான தகவல்!

தமிழகத்தில் கடைகளின் நேரம் குறைப்பு; போக்குவரத்து கட்டுப்பாடு: வெளியான தகவல்!


கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அமலுக்கு வரவுள்ள புதிய கட்டுப்பாடுகளை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, கோயில்களில் பக்தர்கள் தரிசம் செய்ய கட்டுப்பாடு, அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை, மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளுக்கும் 20ஆம் தேதி வரை விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுதவிர பெரும்பாலான சேவைகள் 50 சதவீதத்துடன் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலுக்கு ஏற்றவாறு தேவையான கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசும் மாநிலங்களுக்கு பரிந்துரைத்துள்ளது. மேலும், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேசமயம், தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாகவும், கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏற்கெனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கடைகளை திறக்க காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்க அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கம் முழுவதும் மூடவும், சுற்றுலாத் தளங்களுக்கு தடை விதிக்கவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போக்குவரத்துக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவும் அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக கவசம் அணியாதவர்களிடம் வசூல்; டூப்ளிகேட் போலீஸ் கைது!

இபாஸ் முறையை அரசு மீண்டும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், இபாஸ் நடைமுறைப்படுத்த தேவையான முன்னெற்பாடுகளுடன் இபாஸ் குழு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு 8 மணி அளவில் வெளியாகும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad