ஃபுல் லாக்டவுனுக்கு மறுநாள் எகிறி அடித்த கொரோனா.... சென்னையில் மட்டும் இவ்வளவு கேஸ்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 10, 2022

ஃபுல் லாக்டவுனுக்கு மறுநாள் எகிறி அடித்த கொரோனா.... சென்னையில் மட்டும் இவ்வளவு கேஸ்கள்!

ஃபுல் லாக்டவுனுக்கு மறுநாள் எகிறி அடித்த கொரோனா.... சென்னையில் மட்டும் இவ்வளவு கேஸ்கள்!


சென்னையில் 6000 பிளஸ் கொரோனா கேஸ்கள் உட்பட மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 13 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு எந்த அளவுக்கு பலனளித்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து கடந்த ஒராண்டாக நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில், யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக கடந்த ஒரு வாரமாக கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனுடன் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் சேர்ந்து பொதுமக்களை மிரட்டி வருகிறது.

கொரோனா தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் இன்று முதல் தொடங்கியுள்ளது.

ஆனாலும் கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரவே வேறு வழியின்றி வார நாட்களில் இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் அரசு அமல்படுத்தியுள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் மொத்தம் கிட்டதட்ட 13 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 5,500 பேருக்கு மேலாக தொற்று உறுதி செய்யப்பட்டது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சரி ஞாயிற்றுக்கிழமை முழுமுடக்கம் காரணமாக, இன்று தொற்று எண்ணிக்கை கணிசமான அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழு லாக்டவுனுக்கு அடுத்த நாளான இன்று பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 13,990 புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 6,190 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பீடித்துள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டு -1696, திருவள்ளூர் -1,054, கோவை -602, காஞ்சிபுரம் -508 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னையில் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை -1,127, செங்கல்பட்டு -235. அதாவது புதிதாக தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கையைவிட டிஸ்சார்ஜ் ஆவோரின் எண்ணி்க்கையும் குறைவாக உள்ளதும் பொதுமக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதன் காரணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த கையாளப்படும் பொதுமுடக்க நடைமுறை எந்த அளவுக்கு பலன் தரும் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad