வீடு தேடி வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி… நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 10, 2022

வீடு தேடி வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி… நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

வீடு தேடி வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி… நீங்கள் செய்ய வேண்டியது என்ன?சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 1913, 04425384520 மற்றும் 04446122300 ஆகிய எண்களில் தொடர்பு அவர்களின் இல்லத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு முதன்மை செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விலையில்லாமல் விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.01.2022) சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்ககளப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்தும் பணியினை தொடங்கிவைத்தார்.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப

சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) நேரடியாக சென்று செலுத்திக் கொள்ளலாம்.

இந்த தடுப்பூசி மையங்களின் விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்திக்கொள்ளலாம். அவ்வாறு செல்லும் பொழுது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மாநகராட்சி தடுப்பூசி முகாமில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை மற்றும் ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும்.
நீட் குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பளீச் பேச்சு!

1.முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்தி கொள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

2.இணை நோயுடன் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3.இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

4. 60 வயதை கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்த நபர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும் இல்லங்களிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment

Post Top Ad