மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபச்சாரம்… நகராட்சி அதிகாரிகள் செய்தது என்ன?
புதுச்சேரியில் மசாஜ் சென்டர் பெயரில் இளம்பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் தொடர்ந்து விபச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. அவ்வாறு விபச்சாரம் நடைபெறும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்தும், இதில் ஈடுபட்டு வருபவர்களை போலிசார் கைது செய்தும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இருப்பினும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடைபெற்றுதான் வருகிறது. இதற்காக தனிப்படை அமைத்து போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார், விபசாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் மசாஜ் சென்டருக்கு அனுமதி பெற்று விபசாரம் நடத்திய கட்டிடத்துக்கு சீல் வைக்க நகராட்சிக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலைமையிலான அதிகாரிகள் அண்ணா சாலையில் உள்ள அந்த மசாஜ் சென்டரை பூட்டி சீல் வைத்தனர்.
புதுச்சேரி நகரில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில குற்றவாளிகளை கைது செய்தும், பல்வேறு வழக்குகளை குற்றவாளிகளை போலீசார் தேடியும் வருகின்றனர்.
No comments:
Post a Comment