கணவரின் விந்தணுவால் தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய மனைவி...
கணவரின் விந்தணுவை கொண்டு தன் தோழியை நடிகை கர்ப்பமாக்கிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
அமரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெனிஃபர் குட்வின், 43 வயதான இவர் சமீபத்தில் ஒரு வித்தியாசமான காரணத்திற்காக டிரெண்டாகியுள்ளார். இவர் ஜோஸ் டெல்லாஸ் என்ற ஒரு நடிகரை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் SiriusXM என்ற டிவி நிகழ்ச்சியில் பேசும் தான் தனது கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள தானே உதவியதாக கூறியுள்ளார்.
ஜெனிஃபர் குட்வினின் தோழி ஒருவர் தனியாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. இந்நிலையில் டாக்டர்களிடம் இவர் இது குறித்து பேசிய போது செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து தானம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஜெனிஃபருக்கு தன் கணவரின் விந்தையே தன் தோழிக்கு தானமாக கொடுக்கும் எண்ணம் இருந்துள்ளது. இதை முதலில் அவர்களிடம் சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அவர்கள் முதலில் மறுத்து எதிர்காலத்தில் குழப்பம் வரும் என கருதியுள்ளனர். இந்நிலையில் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து இதற்கு ஒப்புகொணள்ள வைத்துள்ளார். பின்னர் தன் கணவரின் விந்தணுவை தானமாக வழங்கி தன் தோழியை கர்ப்பமடைய வைத்துள்ளார்.
இதற்கிடையில் ஜெனிஃபருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment