மாணவி தற்கொலை விவகாரம்: பாஜகவை வறுத்தெடுத்த காங்கிரஸ் அழகிரி!
தஞ்சையில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியது:
மோடியின் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் குறைந்துள்ளது. பணக்காரர்களின் வருமானம் 39 சதவீதம் உயர்ந்து இருக்கிறது என்று மும்பையில் உள்ள பொருளாதார ஆய்வு மையம் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இந்த ஆய்வறிக்கை உலகம் முழுவதும் பவனி வருகிறது.
தற்போது, நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருகின்றது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. சரியான பொருளாதாரம், தொழில் கொள்கை இல்லாததே இந்த நிலைக்கு காரணம். பிரதமர் நரேந்திர மோடி முன்பு சர்தார் வல்லபாய் படேல் புகழை பாடினார். தற்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகழை பாடுகிறார்.தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதமாற்றம் செய்ய சொன்னதால் மாணவி தற்போது தற்கொலை செய்ததாக சொல்கிறார்கள்.
அரசியல் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பதால், மாணவியின் தற்கொலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, பாஜக உண்ணாவிரதம் இருப்பது அரசியல் நோக்கத்திற்காக செய்கிறது.
No comments:
Post a Comment