த்ரிஷாவின் ட்விட்டர் பதிவு..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

த்ரிஷாவின் ட்விட்டர் பதிவு..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

த்ரிஷாவின் ட்விட்டர் பதிவு..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!


நடிகை திரிஷா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்
மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான திரிஷா தொடர்ந்து 20 வருடங்களாக முன்னணி நாயகியாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் , விக்ரம் , சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.ஜெஸ்ஸி, ஜானு என இவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார் திரிஷா. முதல் மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் இப்பொது கொரோனாவால் திரைபிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கமல், வடிவேலு, அருண் விஜய், என கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டுகொண்டே செல்கிறது.


இவ்வேளையில் நடிகை த்ரிஷாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்ய துவங்கினர்.


இந்நிலையில் தற்போது திரிஷா கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததாக தெரிவித்திருக்கிறார். இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது என்னவென்றால், "நெகடிவ் என்ற வார்த்தை கேட்டு இதுவரை இந்த அளவு சந்தோஷமாக இருந்ததில்லை, உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி, 2022வை சந்திக்க தயாராகவுள்ளேன்", என அவர் பதிவிட்டிருந்தார்.இதனைக்கேள்வி பட்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.

த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad