கேரளாவில் குறையாத கொரோனா... இன்றைய பாதிப்பு நிலவரம் இதுதான்!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அந்த மாநில மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தேசிய அளவில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் கொஞ்சம் குறைய தொடங்கியுள்ளது மக்களை சற்று நிம்மதி அடைய செய்துள்ளது. ஆனால் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை.
அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57.25 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று மட்டும் 154 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள் நிலையில், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.அதேசமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30,200 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53.86 லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது 2.85 லட்சம் பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மாநில சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment