பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!


பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ள நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முன்பாகவே பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு, தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன

பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு இடையே, அனைத்து மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள், அனைத்து மாநகராட்சி, சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்களில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல், கொரோனா அறிகுறிகள் உள்ள மாணவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். கிருமிநாசினி கொண்டு வகுப்பறைகள், பள்ளி வாகனங்களை தினசரி கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் உணவு உண்ணும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் நோய் தொற்று பரவல் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad