முழு ஊரடங்கில் தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!
ஞாயிறு முழு ஊரடங்கில் மருத்து மற்றும் பால் டெலிவரிக்கு தமிழக அரசு அனுமதி.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக சுகாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தினசரி இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
எனினும், தேவைக்கு ஏற்ப முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த வாரம் ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்பட்டது. திருமண நிகழ்வுக்கு செல்வோர் பத்திரிகையை காட்டிவிட்டு செல்லலாம் என்று அரசு தெரிவித்தது.அதேபோல, மின்னணு டெலிவரி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் உணவகங்களும் சொந்தமாக டெலிவரி சேவைகளை மேற்கொள்ள முழு ஊரடங்கில் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. வரும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கில் இன்னொரு தளர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதாவது, ஜனவரி 16 முழு ஊரடங்கின்போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் எனவும், இதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment