தளபதி பேன்ஸ் ரெடியா..?: 'பீஸ்ட்' பட ரிலீஸ் தேதி இதுதான்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வந்தார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு வில்லன்களாக மூன்று பேர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக நடித்து வருவகின்றனர். சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்.
அண்மையில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு நூறாவது நாள் நிறைவடைந்ததை அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் கொண்டாடினர். அதனை தொடர்ந்து அண்மையில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்..
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தில் காமெடியனாக நடித்துள்ள ரெடின் கிங்ஸ்லி அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்தப்படம் கண்டிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே 'பீஸ்ட்' படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment