'புதுப்பொலிவுடன் பொதிகை டிவி!' - அமைச்சர் எல்.முருகன் சூப்பர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 30, 2022

'புதுப்பொலிவுடன் பொதிகை டிவி!' - அமைச்சர் எல்.முருகன் சூப்பர் அறிவிப்பு!

'புதுப்பொலிவுடன் பொதிகை டிவி!' - அமைச்சர் எல்.முருகன் சூப்பர் அறிவிப்பு!


பொதிகை டிவி புதுப்பிக்கப்படும் என அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
புதிய நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுடன், எச்.டி., வடிவில், பொதிகை சேனல் விரைவில் மேம்படுத்தப்படும் என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், இன்று, பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்கு வருகை தந்தார். பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், அவரது பாராட்டைப் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த இளநீர் விற்கும் பெண் வியாபாரி தாயம்மாளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், தாயம்மாளின் கிராமத்தில் உள்ள இடைநிலைப் பள்ளி மேம்பாட்டுக்காக 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதைப் பாராட்டினார். அவரது அருஞ்செயலை பிரதமர் தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டியதை அமைச்சர், தாயம்மாளிடம் சுட்டிக்காட்டினார்.

பின்னர், பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்ற அமைச்சர் எல்.முருகன், அவை இயங்கும் விதத்தைப் பார்வையிட்டார். அமைச்சருடன், தலைமை இயக்குநர் மயங்க் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:
பொதிகை தமிழ் சேனல், புதிய நிகழ்ச்சிகளுடனும், செய்திகளுடனும் எச்.டி. வடிவில் விரைவில் மேம்படுத்தப்பட உள்ளது. உள்ளூர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தரமான நிகழ்ச்சிகளைத் தர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த விவகாரத்தில் யாருடைய வேலைக்கும் பாதிப்பு ஏற்படாது.
சென்னையில் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தொடர்பாக மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில், வர்த்தகத் துறை பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad