காந்தியடிகள் நினைவு தினம்; கடற்கரை சாலைக்கு வருகை தந்த முதல்வர்!
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி.
புதுச்சேரியில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
புதுச்சேரியில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம் லக்ஷ்மிநாராயணன், சாய் சரவணகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் மற்றும் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு தேசபக்தி பாடல் இசைக்கப்பட்டது.
No comments:
Post a Comment