அரசு ஊழியர்களுக்கு போனஸ்… அரசின் நிலைப்பாடு என்ன தெரியுமா?
அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, போனஸ் வழங்காத அதிகாரிகளை கண்டித்து ஊழியர்கள் போக்குவரத்து பணிமனை முன்பு அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், பிஆர்டிசியில் போதிய நிதி இருந்தும் கடந்த ஆண்டுக்கான போனஸ் கோப்புகள் தயார்செய்ய அறிவுறுத்தாத, மேலாண் இயக்குனர் மற்றும் பொது மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புரட்சியாளர் அம்பேத்கர் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் பிஆர்டிசி பணிமனை முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தில், ஏராளமான ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் கலந்து கொண்டனர்.
இதில், உடனடியாக போனஸ் வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து துறை அதிகாரிகள் போனஸ் வழங்க நடவடிக்கை என்றால், அடுத்த கட்டமாக வருகிற 7-ஆம் தேதி அறைநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு போக்குவரத்துதுறை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment