மீண்டும் முன்னணி நடிகரை இயக்கும் அட்லீ..இனி அதிரடி சரவெடிதான்..!
அட்லீ அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனின் படத்தை இயக்கவிருக்கிறார்
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனரான அட்லீ தன் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்த இப்படம் மெகாஹிட்டானது. அதைத்திடர்ந்து விஜய்யை இயக்கும் மாபெரும் வாய்ப்பை பெற்றார் அட்லீ.
அவ்வாய்ப்பை அமோகமாக பயன்படுத்திய அட்லீ தெறி எனும் மிரட்டலான படத்தை கொடுத்தார். தெறி படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ இந்தியளவில் பிரபலமானார்.
அதன் காரணமாக தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை இயக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
சமீபத்தில் அல்லு அர்ஜுனை சந்தித்து அட்லீ ஒரு கதை கூறியிருப்பதாகவும், அக்கதை அல்லு அர்ஜுனிற்கு மிகவும் பிடித்ததால் தன் அடுத்த படத்தின் இயக்குனராக அல்லு அர்ஜுன் அட்லீயை தேர்தெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. புஷ்பா படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக இவர் அட்லீ படத்தில் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் லைக்கா இப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment