முதல்வருக்கு மரியாதை இல்லை...கொந்தளித்த மூத்த அமைச்சர்... ஆடிப்போன திமுக எம்எல்ஏக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

முதல்வருக்கு மரியாதை இல்லை...கொந்தளித்த மூத்த அமைச்சர்... ஆடிப்போன திமுக எம்எல்ஏக்கள்!

முதல்வருக்கு மரியாதை இல்லை...கொந்தளித்த மூத்த அமைச்சர்... ஆடிப்போன திமுக எம்எல்ஏக்கள்!



முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மூத்த அமைச்சரான எ.வ.வேலு சபையில் கொந்தளித்ததை கண்டு திமுக எம்எல்ஏக்கள் ஆடிப் போய் உள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6,7) நடைபெற்றது, முன்னதாக, சம்பிரதாய முறைப்படி ஆளுநர் ஆர்.என். ரவி சபையில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 5) உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு பின் அண்மையில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், அவை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே புதன்கிழமை மாலை 6 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எலஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், நீட் தேர்வு, கொரோனா உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்க்கட்சியினர் சபையில் எழுப்பும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பன உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்களை அளித்ததாக தெரிகிறது.

அதற்கு முன்னர், திமுக சட்டமன்ற கொறடா கோவி.செழியன் வரவேற்புரை ஆற்றிவிட்டு, 'யாராவது எதாவது சொல்ல விரும்புறீங்களா? என கேட்க, யாரும் வாய் திறக்காத நிலையில் சபையில் சில நொடிகள் அமைதி நிலவிய, மூத்த அமைச்சர்களில் ஒருவரான எ.வ.வேலு திடீரென எழுந்து, ரொம்ப நாளா எனக்கொரு குறை இருக்கு;அதனை இன்னைக்கு இங்கே கொட்டித் தீர்த்த ஆக வேண்டும்' என்று சொல்லவே, உடன்பிறப்பு எம்எல்ஏக்கள் பலர், என்ன விஷயமாக இருக்கும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தப்படி ஜாடையாக கேட்டு கொண்டனர்.

தொடர்ந்து பேசிய வேலு, "கடந்த காலங்களில் ஜெயலலிதா சட்டசபைக்குள் இருந்தாரென்றால், அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் சபையில் இருந்து எழுந்து செல்லமாட்டார்கள். இன்னும் சொல்ல போனால் பிபி, சுகர் பிரச்னை இருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூட அவர் அவைக்குள் இருக்கிறார் என்றால், சபையைவிட்டு வெளியே எழுந்து செல்லாமல் பவ்யமாக அமர்ந்திருப்பார்கள்.
ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்துக்குள் இருக்கும்போதே திமுக எம்எல்ஏக்கள் பலரும் சபையை விட்டு எழுந்து அடிக்கடி வெளியே செல்கிறார்கள். பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் நேரத்தில் நமது எம்எல்ஏக்கள் இப்படி நடந்து கொள்வது கொஞ்சமும் சரியில்லை. முதல்வருக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை" என்று அமைச்சர் எ.வ.வேலு கொந்தளித்து தீர்த்துவிட்டார்.


No comments:

Post a Comment

Post Top Ad