நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது? நோட் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், ஒன்றிய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. இதனால் பல ஊர்கள் ஐந்தாண்டுகளாக அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகின்றன.
2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரித்ததால் அப்போதும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. 2021 அக்டோபர் மாதம் விடுபட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று, தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, ஜனவரி 27ஆம் தேதி அன்று, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் பதில் தர வேண்டிய கட்டாயம் உள்ளது.
எந்த சட்டரீதியான தடைகளும் இல்லாத நிலையில், மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது.
ஜனவரி 19ஆம் தேதி, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின், வரும் 27ஆம் தேதிக்குள் எந்த நாளிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் தேர்தல் ஆணைய வட்டாரத்தில். நீதிமன்றம் சொன்ன தேதிக்குள் தேர்தலை நடத்தாவிட்டாலும் தேர்தல் அறிவிப்பையாவது வெளியிட்டுவிட்டால் நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பலாம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment