போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய வாகனம்; அப்புறம் இதான் நடந்துச்சு!
போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு எஸ்கேப் ஆக நினைத்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி இன்று வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடியாக காணப்பட்டது.
ஆனால் பால் கடை, செய்தித்தாள் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதால் தங்கு தடையின்றி கிடைக்கப்பெற்றன. இதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்படாத வாகனம் ஒன்று திருப்பத்தூர் தண்டபாணி கோயில் தெருவின் வழியாக காவல்துறையினரின் கண்களுக்கு மண்ணைத் தூவி கடந்து செல்ல முயன்றது. ஆனால் அப்பகுதியில் இருந்த மின்கம்பிகள், கேபிள் வயர்களை துண்டித்து விட்டு செல்வதை அறிந்த பொது மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதன் பேரில் அந்த வாகனத்தை பிடித்து வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்து காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்தனர். இதே போல் அனுமதி இல்லாமல் திறந்திருக்கும் கடைகளுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டு காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். மேலும் முகக் கவசம் இன்றி வரும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களையும் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். கொரோனா ஞாயிறு ஊரடங்கை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தும் மக்கள் விழிப்புணர்வு அடையாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
No comments:
Post a Comment