பெண்களே உஷார்... உங்களை துரத்தும் ரகசிய கண்கள்... கண்டுபிடிப்பது எப்படி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

பெண்களே உஷார்... உங்களை துரத்தும் ரகசிய கண்கள்... கண்டுபிடிப்பது எப்படி?

பெண்களே உஷார்... உங்களை துரத்தும் ரகசிய கண்கள்... கண்டுபிடிப்பது எப்படி?



பொது இடங்கள் மட்டுமில்லாமல், தனிப்பட்ட இடங்களிலும் கூட பெண்களை கண்காணிக்கும் கண்கள் நிறைய உள்ளது. ஆம், ரகசிய கேமராக்கள் குறித்து தான் சொல்கிறேன். இதை எளிதாகக் கண்டுபிடிக்கும் சில வழிமுறைகளை அறிந்துவைத்திருப்பது அவசியமாகிறது.
எங்கு தான் நிம்மதி... இது பெண்களுக்கு கிடைத்த சாபம் என்றே சொல்லாம். இந்த சாபத்தைக் களையப் பெண்கள் தைரியத்துடன் முன்வர வேண்டும். தவறுகள் கண்டறியப்பட்டால், நீங்கள் பாதுகாப்பாக உணரும் நபர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். உங்களின் மெளனமே, உங்களுக்கு எதிரியாக மாறும். எனவே, எதைக் கண்டும் அஞ்சாமல் உடனடி நடவடிக்கையை எடுக்க உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள்.

இதை சொல்வதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. ஆம், பொது இடங்களிலும், தனிப்பட்ட இடங்களிலும் பெண்களை ரகசியமாக படம்பிடிக்கும் சம்பவங்கள் பெருகி வருகின்றன. தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் வேளையில், கூடவே ஆபத்துக்களும் தொற்றிக் கொள்கிறது. இக்காலத்தில் கணிக்க முடியாத அளவிற்கு, ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த வேலைகளை செய்யும் சமூக விரோதிகளை வேரறுப்பது அவசியம்.


கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக் குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய படக்கருவிகளைப் பொருத்தமுடியும்.

உங்களைப் பிரதிபலிப்பது கூட ஆபத்தாகலாம்!
இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான். ஏனென்றால் இதுதான் அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. உடை மாற்றும் அறைகளில் இருக்கும் ஆளுயரக் கண்ணாடியைக் கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் நம்மைப் படம்பிடிக்க முடியும். பெண்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


ரகசிய கேமரா இருக்கும் கண்ணாடியை கண்டறிய, உங்கள் விரலை கண்ணாடியின் மீது வைக்க வேண்டும். விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கும் இடையே இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இல்லை என்றால் அங்கு ரகசிய கேமரா உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். தற்போதைய டெக் உலகில் கேமராக்களை கண்டறிய பல்வேறு மொபைல் செயலிகள் உள்ளன. அதுபோன்ற சில செயலிகள் மூலம் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாம் என்பதால், அதிலும் கவனத்துடன் செயல்பட சைபர் காவல்துறை அறிவுறுத்துகிறது.

சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

இந்த இன்ஃப்ராரெட் கேமராக்களை நீங்கள் உங்கள் போன் கேமராக்கள் வழியாகவும் கண்டறியமுடியும். கேமராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கேமரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம். ரிமோட்டின் மேல் பகுதியிலுள்ள விளக்குபோன்ற பகுதிக்கு முன் செல்போன் கேமராவை வைத்து படமெடுத்தபடியே எந்த பட்டனையாவது அழுத்தினால் அதில் சிவப்பு நிற ஒளி எரியும். அவைதான் இன்ஃப்ராரெட். இது சாதரண கண்களுக்கு தெரியாது.
நீங்கள் அசந்த நேரத்தில், உங்கள் அந்தரங்கத்தைப் படம்பிடித்து ஆபாச இணையதளங்களில் காசாக்க காத்திருக்கிறது ஒரு அயோக்கிய கும்பல். எனவே, ஏதோ ஒரு இடத்தில் ரகசிய கேமரா இருப்பதைக் நீங்கள் கண்டுபிடித்தால், பெண்கள் பதற்றமடையாமல் உடனடியாக, நீங்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய நபரிடம் தெரிவிக்க வேண்டும். அந்த நபர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சமூக விரோதிகளுக்கு சட்டப்படி 3 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.


No comments:

Post a Comment

Post Top Ad