மரணக்குழிக்கு மலர் வலையம்: திருப்பூர் அதிகாரிகளை அதிரவிட்ட போராட்டக்காரர்கள்!
திருப்பூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமான சாலைக்கு மலர் வளையம் வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூரில் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகவும் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது,மழை காலம் முடிந்ததும் சரி செய்து தரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி கூறியிருந்தனர்.
ஆனால் மழை காலம் முடிந்ததும் தற்போது வரை சாலைகள் சீரமைக்கப்படாமல்,தற்காலிகமாக மண் கொண்டு நிரப்பி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு பலரும் காயமடைந்து வருகின்றனர்.இதனை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்வேறு பக்திகளிலும் ஆர்ப்பாட்டம்,வாழை மரம் நட்டு கவனத்தை ஈர்த்தல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலம்பாளையம் முதல் அணைப்பாளையம் வரையிலான சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பாதையில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதோடு, அப்பகுதியில் போக்குவரத்து பிரச்சனைக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மலர் வளையத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தி குண்டும் குழியுமான சாலையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி, பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment