அடுத்த இரண்டு வருஷத்துக்கு சூர்யாவை கைலயே பிடிக்க முடியாது.. ரொம்ப பிசி..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

அடுத்த இரண்டு வருஷத்துக்கு சூர்யாவை கைலயே பிடிக்க முடியாது.. ரொம்ப பிசி..!

அடுத்த இரண்டு வருஷத்துக்கு சூர்யாவை கைலயே பிடிக்க முடியாது.. ரொம்ப பிசி..!


நடிகர் சூர்யா அடுத்ததடுத்து நடிக்கவுள்ள நான்கு படங்களின் இயக்குனர்கள் குறித்த விவரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'சூரரைப் போற்று' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் 'ஜெய் பீம்' படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'எதற்கும் துணிந்தவன்' படம் பிப்ரவரி 4 ஆம் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல், திரையரங்குகள் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணத்தால் இந்தப்படம் தள்ளி போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் சூர்யா படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்ததாக நடிக்கவுள்ள நான்கு படங்களின் இயக்குனர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா மற்றும் சூர்யா இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ படம் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையம்சம் என்று கூறப்பட்டாலும் படத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த அம்சங்களும் இருக்கும் என்றும் வெற்றிமாறன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படமும், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad